ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் இன்று கடந்த முறை பைனலில் மோதிய குஜராத் அணியும் ராஜஸ்தான் அணியும் பலப்பரீச்சை நத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர் விரித்தின் ஹா 4 ரன்களில் வெளியேறினாலும், சாய் சுதர்சன் பொறுப்பாக விளையாடி 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் ஷுப்மன் கில் பட்டையை கிளப்பினாலும், மறுபுறம் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் கவுண்டர் அட்டாக் செய்தார்.
இதனால் குஜராத் அணியன் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ஹர்திக் பாண்டியா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் குஜராத் அணி 91 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 27 ரன்களையு சேர்த்ததன் மூலம் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில், இன்னிஙஸ் மூலம் ஹர்திக் பாண்டியா ஒரு மகத்தான மைல்கல்லை எட்டினார். அதன் படி, ஐபிஎல் தொடரில் 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இந்த சாதனையை இதுவரை ஐந்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே படைத்திருக்கிறார்கள். வாட்சன்,பொலார்ட் , காலிஸ் ஜடேஜா மற்றும் ரசில் மட்டுமே 2000 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் எடுத்திருக்கிறார்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடத் தொடங்கிய ஹர்திக் பாண்டியா அடுத்த ஆண்டு இந்திய அணியில் ஸ்டார் வீரராக உருவானார். ஆறு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியாவின் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. முதல் தொடரிலே ஹர்திக் பாண்டியா சாம்பியன் கோப்பையை வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.