முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பாண்டியா; வைரல் காணொளி!

Updated: Sun, Aug 06 2023 22:41 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 4 ரன்னில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 51 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 27, ஹர்திக் பாண்டியா 24 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அந்த அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் இன்னிங்ஸின் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். 

முதல் பந்தை எதிர்கொண்ட பிராண்டன் கிங் அதனை கவர்டிரைவ் அடிக்க முயற்சிக்க, அது நேராக சூர்யகுமார் யாதவிடம் தஞ்சமடைந்தது. இதையடுத்து களமிறங்கிய ஜாசன் சார்லஸ் அதே ஓவரின் 4ஆவது பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்த விக்கெட்டை இழந்தார். 

 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரின் முடிவில் 2 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் தற்போது நிக்கோலஸ் பூரன், ரோவ்மன் பாவெல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டுவருகின்றனர். இந்நிலையில் முதல் ஓவரில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் டிரண்டாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை