IRE vs IND, 2nd T20I: உம்ரான் மாலிக்கை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, Jun 29 2022 11:19 IST
Image Source: Google

அயர்லாந்து அணிக்கு எதிரான இருபது ஓவர் தொடரை இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற முதல் தொடரிலேயே ஹர்திக் பாண்டியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.

இதே போன்று ஐபிஎல் கோப்பையையும் முதல் சீசனிலேயே குஜராத் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தட்டி சென்றார். இதன் மூலம் ரோhiத் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் என்ற பந்தயத்தில் ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுலை ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டியுள்ளார். ஒரு 6 மாதத்திற்கு முன்பு, ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் கழற்றிவிடப்பட்ட ஹர்திக், இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்காமல் காயத்தால் அவதிப்பட்டார். தற்போது அடுத்த கேப்டன் என்ற லெவலுக்கு ஹர்திக் வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இறுதி ஓவரின் போது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எந்த கவலையும் படவில்லை. நெருக்கடியில் சிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். எதை பற்றியும் நினைக்காமல் அந்த தருணத்தில் முழு கவனத்தோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

உம்ரான் மாலிக் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவருடைய பந்துவீச்சின் வேகத்தை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அயர்லாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். அவர்களை விளையாடிய சில ஷாட்கள் எல்லாம் பிரமிக்க வைத்தன. எங்களுடைய பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களால் தான் வெற்றி பெற்றோம்.

ரசிகர்களுக்கு எங்கள் நன்றி. அயர்லாந்திலும் அதிகளவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள். தினேண் கார்த்திக், சஞ்சு சாம்சனுக்கு பார்வையாளர்கள் அதிகளவில் ஆதரவி தந்ததை பார்க்க முடிந்தது. தீபக் ஹூடா மற்றும் உம்ரான் மாலிக்கின் ஆட்டங்கள் மகிழ்ச்சியை அளிக்கின்றன. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது சிறுவனாக இருக்கும் போதே என்னுடைய கனவு. ஆனால் கேப்டனாக முதல் தொடரை கைப்பற்றியது மிகவும் ஸ்பெஷலான தருணமாக கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை