ஆர்சிபி என்னை நம்பியது: விராட் கோலி மனம் திறப்பு

Updated: Thu, May 05 2022 14:03 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் பல அணிகள் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள், என்னை நம்பவில்லை, ஆர்சிபி அணி எனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்னை நம்பினார்கள் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

ஆர்சிபி அணியில் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து விராட் கோலி விளையாடி வருகிறார். ஏறக்குறைய 15 சீசன்களாக கோலி விளையாடியதில் 8 சீசன்களுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டம் ஒருமுறைகூட சாம்பியன் பட்டம்வெல்லவில்லை. இதுவரை 217 போட்டிகளில் ஆடி 6,469 ரன்களை கோலி குவித்துள்ளார். 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனிலிருந்து கோலி கேப்டனாக அல்லாமல் சாதாரண வீரராக மட்டுமே அணியில் நீடிக்கிறார்.

இருப்பினும் கோலிக்கும், ஆர்சிபி அணிக்கும் இடையிலான நெருக்கம், பந்தம், நட்பு, குறையவில்லை. தொடர்ந்து கோலி ஆர்சிபி அணியில் இருந்து வருகிறார், ஆர்சிபியும் கோலியை விடுவதாக இல்லை. ஆர்சிபி அணிக்கும் ,தனக்கும் இருக்கும் பிணைப்பு குறித்து விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஐபிஎல் தொடரில் பல அணி நிர்வாகிகள் என்னை ஏலத்துக்கு வர வேண்டும், வேறு அணிக்கு மாற வேண்டும் என்று கேட்டார்கள், வற்புறுத்தினார்கள். நேர்மையாகக் கூறினால் எனக்கும் கூட அந்த எண்ணம் இருந்தது. ஆனால், கடைசியில் என்னாகும், இத்தனை ஆண்டுகள் ஓர் அணியில் இருந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கை நகர்ந்துவிடும்.

கோப்பையை வென்ற பல்வேறு சிறந்த வீரர்கள், ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், உன்னைப் போல் அழைப்பதில்லை. ஓய்வறையில் உன்னை யாரும் ஓ நீங்கள்தான் ஐபிஎல் சாம்பியனா நீங்கள் தான் உலகக் கோப்பை சாம்பியனா என்றெல்லாம் அழைப்பதில்லை.
நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் மக்கள் உங்கள் விரும்புவார்கள். நீங்கள் மோசமானவராக இருந்தால் உங்களைவிட்டு விலகிச் செல்வார்கள். இதுதான் வாழ்க்கை. 

என்னைப் பொறுத்தவரை, ஓர் அறைக்குள் இருக்கும் 5 நபர்கள், கடைசியாக கோப்பையை இந்த மாதிரி வீரர்களை வைத்து வென்றுவிட்டீர்கள் என்று சொல்வதைவிட, நான் என் வாழ்க்கையில் கடைபிடிக்கும் சிறந்த கொள்கையைப் போன்றது ஆர்சிபி அணியுடனான எனது விஸ்வாசமாகும். வாழ்க்கையில் 5 நிமிடங்கள் நன்றாக இருப்பதுபோல் உணர்ந்தால், 6-வது நிமிடம் ஏதாவது துன்பம் வந்துசேரும். ஆதலால் எனக்கு உலகத்தின் கடைசி இதுவல்ல.

ஆர்சிபி அணிக்கு எனக்கு முதல் 3 ஆண்டுகள் எனக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கினார்கள், என் மீது நம்பிக்கை வைத்தனர். இதுதான் சிறந்த அம்சம். ஏனென்றால், பல அணிகள் எனக்கு வாய்ப்புகளை வழங்கினார்கள், ஆனால், எனக்கு ஆதரவாக இல்லை, என்னை நம்பவும் இல்லை.
நான் இப்போது வெற்றிகரமான நபராக வரும்போது, வெளியில் சிலர்  பேசும் கருத்துக்கு ஆட்பட வேண்டியதிருக்கிறது 2018ம் ஆண்டு இங்கிலாந்து தொடர்வரை இதுதான் நடந்தது. உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் 4 ஆண்டுகள் நான் சிறப்பாக ஆடினேன்.  ஆனால், இங்கிலாந்தில் மட்டும்தான். எப்படி வாழ்ந்தாலும், குறை கூறுபவர்கள் இருக்கத்தான் போகிறார்கள். 

உண்மையில் உங்கள் வாழ்க்கையை அப்படியே வாழ முடியாது, என்னைடைய சொந்த விஷயங்களை நான் செய்ய வேண்டும். நேர்மையாகக் கூறினால் என்னையும், அனுஷ்காவையும் தவிர 3-வது நபர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை.அவர்கள் பேசுவதைப் பற்றி யோசிப்பதில்லை. நானும் அனுஷ்காவும்பல்வேறு விஷயங்களை ஆலோசிப்போம். எங்களுக்குள் உண்மையாக இருக்கிறோம், என்னைப் பொறுத்தவரை மற்றவர்களின் கருத்து என்பது எனக்கு பொருட்டு அல்ல. இதைத் தவிரவேறு ஏதுமில்லை

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை