இது போன்ற தவறுகளை ஏன் பாபர் ஆசாம் செய்கிறார் - வாசிம் அக்ரம், சோயிப் மாலிக் காட்டம்!

Updated: Tue, Oct 24 2023 17:13 IST
Image Source: Google

உலக கோப்பையில் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல கூட வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி பலம் குன்றிய ஆஃப்கானிஸ்தானுடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு பலரும் பாபர் ஆசாம் மீது பழி சுமத்தி வருகிறார்கள். 

எனினும் நேற்றைய ஆட்டத்தில் பாபர் ஆசாம் 92 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் சேர்த்தார். ஆனால் பாபர் அசாமின் கேப்டன்சி மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். பாகிஸ்தான் அணி தோற்பதற்கு பாபர் அசாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம். பீல்டிங்கில் சொதப்புவது தான் ஆனால் முன்னாள் கேப்டன் வசிம் அகரம் பாபர் அசாம் செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டினார். அதில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 46ஆவது ஓவரை சுழற் பந்துவீச்சாளருக்கு பாபர் ஆசாம் ஏன் குடுத்தார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “45 ஓவர்கள் முடிந்துவிட்டது .இன்னும் ஐந்து ஓவர்கள் தான் என்று இருக்கிறது .இரண்டு ஓவர் ஷாகின் ஆஃப்ரிடியும், இரண்டு ஓவர் ஹாரிஸ் ரவுப்பும், ஒரு ஓவர் ஹசன் அலியும் வீசினார். 50 ஓவரையும் முடித்திருக்கலாம். போட்டியும் கடைசி பந்து வரை கூட சென்றிருக்கும். ஆனால் 46ஆவது ஓவரின் சுழற் பந்துவீச்சாளரான உசாமா மிர்க்கு பாபர் ஆசாம் கொடுத்தார். இதற்கான காரணமே எனக்கு புரியவில்லை. இது போன்ற தவறுகளை ஏன் பாபர் ஆசாம் செய்கிறார் என்பதை கேட்டே ஆக வேண்டும்” என்று கூறினார். 

இதற்கு பதில் அளித்த சோயிப் மாலிக், “பாபர் அசாமின் இது போன்ற முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது. பேட்ஸ்மேனாக மிகச்சிறந்த வீரராக விளங்கும் பாபர் அசாம் ஒரு தலைவராக எப்படி இருக்கிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை