ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழித்துவிடுவார் - தன்வீர் அகமது குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, ஜூனியர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடத்துவது தொடர்பாக பேசியிருந்தார். ஆனால் அதையெல்லாம் நடத்தினால், பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்துவிடும் என்று தன்வீர் அகமது அச்சம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள தன்வீர் அகமது, "ஜூனியர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை நடத்துவதற்கு பதிலாக 2 நாள் அல்லது 3 நாள் போட்டிகள் கொண்ட தொடர்களை நடத்துவது நல்லது. ரமீஸ் ராஜாவின் முடிவுகள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிக்கப்போகின்றன. இதுமாதிரியெல்லாம் செய்தால், இளம் வீரர்கள் டெஸ்ட் ஃபார்மட்டில் ஆட ஆர்வம் காட்டாமல் வெறும் சிக்ஸர்களை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.
இந்த மனநிலை அண்டர் 19 கிரிக்கெட்டை மட்டுமல்லாது, அண்டர் 13 கிரிக்கெட்டையும் பாதிக்கும். டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டை அழித்து கொண்டிருக்கிறது என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது சேர்மன் ஜூனியர் டி20 லீக்கை நடத்த திட்டமிடுகிறார்" என்று கடுமையாக விளாசியுள்ளார்.