இந்த வீரர் நம்பர் ஒன் பவுலராக வருவார் - ஸ்ரீகாந்த்!
தற்போது 23 வயதான ஆர்ஷ்தீப் சிங், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்ஸ்தீப் சிங், இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
எக்கனாமி வெறும் 6.51 என்ற கணக்கிலே உள்ளது. ஆர்ஷ்தீப் வீழ்த்திய ஆறு விக்கெட்டுகளில் ஐந்து விக்கெட்டுகள் டெத் ஓவர் எனப்படும் கடைசி கட்ட ஓவர்களில் வீழ்த்தப்பட்டிருக்கிறது. 6.35 ரன்கள் டெத் ஓவர்களில் அவர் வழங்கியிருக்கிறார். ஆர்ஷ்தீப் பந்து வீசும் போது 13 பந்துகளுக்கு ஒரு முறை தான் பவுண்டரிகளையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் .
இது இது குறித்து பேசிய ஸ்ரீகாந்த், “டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக எதிர்காலத்தில் ஆர்ஸ்தீப் சிங் வருவார். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் .அவர் கண்டிப்பாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும். சேட்டன் சர்மா அவரை தேர்வு செய்வார் என நம்புகிறேன்” என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியில் ஹர்ஷல்பட்டில் இருப்பதால் அவரைப் போலவே வந்து வீசும் அர்ஷ்தீப் சிங் இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான்.