விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் விளையாட இதனை செய்தாக வேண்டும் - டேனிஷ் கனேரியா!

Updated: Sun, Aug 14 2022 21:40 IST
‘He will need to perform by hook or by crook’- Danish Kaneria explains why Virat Kohli must regain (Image Source: Google)

ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ, அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

குறிப்பாக மோசமான பார்மால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மோசமான ஃபார்ம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்ட விராட் கோலி நிச்சயம் ஆசிய கோப்பையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று சவால் விட்டுள்ளதால் அவர் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் குறித்து அதிகமான விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தி வரும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனரியா உலக கோப்பை தொடர்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டுமென்றால் கட்டாயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டேனிஷ் கனரியா கூறுகையில்,“உலகத்தை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெற வேண்டுமென்றால் அவர் ஆசியக் கோப்பையில் நிச்சயம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அது சரியான வழியிலோ அல்லது தவறான வழியிலோ அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். 

அவரைப் போன்ற ஒரு வீரரை அணியில் வைத்துவிட்டு விளையாட விடாமல் வைத்திருந்தால் அது நிச்சயம் கடினமாக போய்விடும், பாகிஸ்தான் அணி விராட் கோலியை பார்த்து பயப்படுகிறது அவர் மட்டும் தன்னுடைய பழைய பார்மை கொண்டு வந்துவிட்டால் நிச்சயம் அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் தொல்லையாக அமைந்துவிடும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை