ENGW vs NZW: ஹீதர் நைட் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு வின்ஃபில்ட் ஹில் - பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் வின்ஃபில்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, பியூமண்ட் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இதன்மூலம் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹீதர் நைட் 89 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சூஸி பேட்ஸ், லாரன் டவுன், மேடி கிரீன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய செட்டர்வைட் அதிரடியாக விளையாடி 79 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இருப்பினும் அந்த அணி 46.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 211 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று அசத்தியது.