36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தினேஷ் கர்த்திக்; ரசிகர்கள் வாழ்த்து!
இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி, தற்போது வரை விளையாடி வருகிறார்.
மேலும் கங்குலி, டிராவிட், சேவாக், தோனி, ரெய்னா, கோலி என பல கேப்டன்களுக்கு கீழ் இவர் விளையாடியுள்ள இவர், தேனி அணியில் இருக்கும் காரணமாக தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்தார்.
மேலும் இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இடம்பெற்று விளையாடியனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பின் இவர் அணியிலிருந்து கலற்றிவிடப்பட்டார். தற்போது இவர் ஐபிஎல், ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மற்றும் விளையாடி வருகிறார்.
இந்திய அணிக்காக இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள், 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்தி, மூவாயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 2004ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றவரும் இவர் தான் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் இன்று தனது 36ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு இந்திய அணியின் யுவாராஜ் சிங், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டவர்களும், பிசிசிஐயும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இந்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் சுனில் கவாஸ்கருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.