தோனி குறித்து வைரலாகும் சந்தீப் சர்மா ட்வீட்!

Updated: Thu, Apr 13 2023 18:17 IST
Image Source: Google

ஐபிஎல் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் தோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியை அளித்தது.

கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தோனிக்கு யாக்கர் வீசி வெறும் இரண்டு மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா.

 

இந்த நிலையில் கடைசி ஓவர் குறித்து சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுடைய 200 வது ஐபிஎல் போட்டிக்கு வாழ்த்துகள் தோனி பாஜி. உங்களுடன் இந்தக் களத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது நன்றியுடன் இருப்பேன். என் கனவு நிறைவேறியது.” என்று பதிவிட்டுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை