உடற்தகுதியில்லாத ஒருவரை எவ்வாறு அணியில் சேர்த்தீர்கள் - சந்தீப் படேல் கேள்வி
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்தே பந்துவீச முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். கடந்த ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து இந்திய அணியில் பாண்டியா இடம் பெற்றும் எந்தப் போட்டியிலும் மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆடவில்லை,பந்துவீசவும் இல்லை. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றும் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசவில்லை.
இந்நிலையி்ல் உடற்தகுதியில்லாத நிலையில் ஆல்ரவுண்டர் வரிசையில் டி20உலகக் கோப்பைக்கான இந்திய அணியல் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் தோள்பட்டையில் அடிவாங்கி பீல்டிங் செய்ய வராமல் சென்றார். அதன்பின் ஸ்கேன் செய்துபார்த்தபோது அவருக்கு காயம் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில் சர்வதேச போட்டியில் விளையாடும் ஒருவீரர் 100 சதவீதம் உடற்தகுதியில்லாத நிலையில் எவ்வாறு அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முன்னாள் வீர்ர சந்தீப் பாட்டீல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சந்தீப் படேல்“ 100 சதவீதம் உடற்தகுதியில்லாத ஒரு வீரரை எவ்வாறு உலகக் கோப்பைக்கு இந்திய அணியில் தேர்ந்தெடுத்தார்கள். ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததற்கு முழுமையாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசிசிஐ ஆகியவற்றுக்கு மட்டுமே தெரியும்.
அடிப்படையில் ஒரு வீரர் 100 சதவீதம் உடற்தகுதியில்லாவிட்டால், அதை தேர்வாளர்களிடம் விட்டுவிடவேண்டும். ஐபிஎல் முழுவதும் ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை என்பதால் தேர்வுக்குழுவினர்அது குறித்து முடிவுஎடுத்திருக்க வேண்டும். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவைச் சேர்ப்பதற்கு முன் அவருக்கு உடற்தகுதிசான்றைக் கேட்டிருக்க வேண்டும்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
ஹர்திக் பாண்டியா அணிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு யாரேனும் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்தியப் பயிற்சியாளரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. பாண்டியா உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று ரோஹித் சர்மா, ரஹானே சொல்கிறார்கள். போட்டியின் போது ஒருவர் உடற்தகுதியில்லாமல் போகும் வீரர் ஒருவரை எவ்வாறு உடற்தகுதியுடன் உள்ளார் எனக் கூற முடியும். இது உலகக் கோப்பை, சாதரணத் தொடர் அல்ல, அல்லது போட்டியும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.