ரசிகர்களை வாயடைக்க வைக்கும் நடுவர்களின் சம்பளம்!

Updated: Mon, Apr 25 2022 18:28 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் நடுவரின் முடிவு ஆட்டத்தின் வெற்றியாளரையே மாற்றிவிட்டது.

கடைசி நேரத்தில் அம்பயர் நிதின் மேனன் நோ பால் கொடுக்காததால், டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் பிரச்சினைகளும் வெடித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுபோன்று நடைபெறுவது இது முதல் முறையல்ல. மும்பை - ஆர்சிபி போட்டியில் விராட் கோலி அரைசதத்தை நெருங்கும் போது எல்.பி.டபள்யூ அவுட் கொடுக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு காட்டப்பட்ட வீடியோவில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. 

இதே போல லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டிங் செய்த போது, லைனுக்கு வெளியில் சென்ற பந்திற்கு கூட வைட் தரவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவே மாறியது.

இப்படி சர்ச்சை முடிவுகளால் ஆட்டத்தின் முடிவையே மாற்றும் அம்பயர்களின் சம்பளம் கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள். ஐபிஎல் தொடரில் மொத்தம் 2 பிரிவுகளாக அம்பயர்கள் பிரிக்கப்படுகிறார்கள். 

அதாவது ஐசிசி அம்பயர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.1,98,000 ஊதியமாக தரப்படுகிறது. இதுவே உறுப்பினர் இல்லாத அம்பயருக்கு ஒரு போட்டிக்கு ரூ.59,000 ஊதியம் தரப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஸ்பான்சர்ஷிப் பணம் என தனியாக ஒரு சீசனுக்கு ரூ.7,33,000 தரப்படுகிறது.

ஐபிஎல் 2022இல் இந்திய நடுவர்கள்

அனில் சௌத்ரி, சி. சாம்சுதின், விரேந்தர் சர்மா, கே.என்.ஆனந்தபத்மனாபன், நிதின் மேன், எஸ்.ரவி, வினீத் குல்கர்ணி, யஷ்வந்த் பார்டே, உல்ஹாஸ் காந்தே, அனில் தந்தேகர், கே.ஸ்ரீனிவாசன், பாஷ்சிம் பதாக்

அயல்நாட்டு நடுவர்கள்

ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ( இங்கிலாந்து ), பால் ரேஃபல் ( ஆஸ்திரேலியா ), கிறிஸ்டோபர் காஃபானே ( நியூசிலாந்து )

போட்டியில் சரி, தவறு என எது நடந்தாலும் நடுவர்களின் முடிவே இறுதியாகும். இதனை வீரர்களால் மாற்ற முடியாது. மீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டால் வீரர்களுக்கு தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் தவறாக தீர்ப்பு வழங்கிய நடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தான் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை