ஆர்சிபி அணியில் இணைவதை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் - வநிந்து ஹசரங்கா!

Updated: Thu, Apr 13 2023 18:10 IST
"I adjust to the wickets in Bangalore" - Wanindu Hasaranga (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடர் தற்போது தான் மும்முரமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லக்னோ, ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா போன்ற அணிகள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தலை இரண்டு வெற்றிகள் உடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. பெங்களூரு அணி மற்றும் ஹைதராபாத் மும்பை ஆகிய அணிகள் ஒரு வெற்றிகளுடன் அடுத்தடுத்து இடங்களில் உள்ளது. 

டெல்லி அணி எந்த ஒரு வெற்றியும் பெறாமல் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதுவரை எந்த ஒரு வெற்றியும் பெறாமல் டெல்லி அணி மற்றும் கடைசி இடத்தில் இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரின் ஆரம்பத்தை வெற்றியுடன் தொடங்கினாலும் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணைகளுடன் பெற்ற தோல்வி அந்த அணியை சற்று தடுமாறச் செய்திருக்கிறது. ஆர் சி பி அணிக்கு பேட்டிங் தான் பலம் என்றாலும் அந்த அணியின் வந்து வீசி சற்று பலவீனமானதாகவே இருக்கிறது. 

இந்நிலையில் இலங்கை அணியின் ஆல்ரவுண்டரும் ஆர் சி பி அணியின் ஆல்ரவுண்டர்மான வணிந்து ஹசரங்கா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அணியுடன் இணைந்து இருக்கிறார். இது ஆர்சி பிரியாணிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. அணியுடன் இணைந்த அவர் தன்னுடைய முதல் நாள் பயிற்சியின் பின்னர் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஆர்சிபி அணியில் இணைவதை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் எனது அணியின் வீரர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி முதல் நாள் பயிற்சியில் பந்து வீசினேன் நன்றாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்டத்திற்கு தயாராகி விட்டதாகவே நினைக்கிறேன். பெங்களூர் ஆடுகளங்களுக்கு தகுந்தவாறு தன்னால் பந்துவீச்சின் அளவை மாற்றிக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை