என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே!

Updated: Wed, Feb 28 2024 14:56 IST
என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன் - துஷார் தேஷ்பாண்டே! (Image Source: Google)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடபாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்று வரும் இரண்டாவது காலிறுதிச்சுற்று போட்டியில் மும்பை மற்றும் பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது முதல் இன்னிங்ஸில் 384 ரன்களை குவிக்க, அடுத்து விளையாடிய பரோடா 348 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டா, தனுஷ் கோட்யான் ஆகியோரது சதத்தின் மூலம் அந்த அணி 569 ரன்களைச் சேர்த்து மிரட்டியது. இதனால் பரோடா அணிக்கு 606 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இலைக்கை துரத்திய பரோடா அணியால ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் 121 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால் இப்போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. 

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி முன்னிலைப் பெற்றதன் காரணமாக அந்த அணி வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் கடைசி விக்கெட்டாக களமிறங்கிய துஷார் தேஷ்பாண்டே சதமடித்து அசத்தியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தனது சதம் குறித்து பேசியுள்ள துஷார் தேஷ்பாண்டே, “நான் 11ஆவது இடத்தில் பேட்டிங் செய்து சதமடித்துள்ளதை திருப்தியாக உணர்கிறேன். ஏனானில் என்னால் 11ஆவது இடத்தில் பேட்டிங் செய்த போதும் இதனை சாதிக்க முடிந்துள்ளது. நான் எப்போதுமே என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்பதை நிரூபிக்க நினைத்தேன். மேலும் என்னால் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராகவும் செயல்பட முடியும் என்பதனை அனைவருக்கும் காட்ட எண்ணினென். அதனை தற்போது செய்துள்ளேன். 

என்னுடைய தந்தை நான் ஒரு ஆல் ரவுண்டராக வருவேன் என நம்பினார். தற்போது இந்த சதத்தை நான் அவருக்காக அர்பாணிக்கிறேன். எனது ஆரம்ப காலங்களில் நான் ரப்பர் பந்துகளில் விளையாடிய போது சிறந்த ஹிட்டராக செயல்பட்டதுடன், பெரிய ஸ்கோர்களையும் குவித்துள்ளேன். இப்போட்டியில் நான் ஒவ்வொரு பந்தையும் தேர்வு செய்து விளையாடினேன். ஆனாலும் நான் இப்போட்டியில் சிக்சர் அடித்த பந்தும், நான் ஆட்டமிழந்த பந்தும் ஒரே மாதிரியானது தான். 

அதன் காரணமாக எங்களால் இப்போட்டியில் கடைசி விக்கெட்டிற்கு அதிக பார்ட்னர்ஷிப்பை அமைத்த வீரர்கள் எனும் சாதனையை ஒரு ரன்னில் தவறவிட்டுள்ளோம். இது எங்களுக்கு ஏமாற்றத்தை தந்தாலும், மீண்டும் ஒருநாள் எனக்கான வாய்ப்பு கிடைக்கும். அன்று நான் அதனை முறியடித்துக்காட்டுவேன்” என்று தெரிவித்துள்ளார். மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை