தோனி போன் நம்பர் கூட என்னிடம் இல்லை - ரவி சாஸ்திரி
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தான் பணியாற்றிய 7 ஆண்டுகள் அனுபவத்தை ரவி சாஸ்த்ரி அன்மை காலமாக பேசி வருகிறார். இதில் சில சர்ச்சை கருத்துகளையும் கூறி பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரின் யூடியூப் சேனலுக்கு ரவி சாஸ்த்ரி அளித்த பேட்டியில், “விராட் கோலியும், தோனியும் களத்தில் அப்படியே நேருக்கு நேர் எதிர்மறையாக நடந்து எகொள்வார்கள். களத்துக்கு வந்தால் கோலி ஒரு ஆக்கோரஷமானவர். எதிரணியை வீழ்த்த வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார். ஆனால் தோனி அமைதியின் உச்சம். எப்போதும் கூலாக இருப்பார்.
சதம் அடித்தாலும் சரி, டக் அவுட்டானலும் சரி, வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, அவ்வளவு ஏன் உலகக் கோப்பையை வென்றாலும் சரி தோனி அலட்டி கொள்ளவே மாட்டார். சச்சினும் களத்தில் கூர்மையாக போட்டியிலேயே கவனம் செலுத்துவார். ஆனால் சச்சினுக்கு களத்தில் நிறைய முறை கோபம் வந்துள்ளது.
தோனியின் போன் நம்பர் என்னிடம் கிடையாது. தோனியின் போன் நம்பரை நான் இதுவரை அவரிடம் கேட்டது இல்லை. அவரிடம் போனில் பேசியதும் இல்லை. தோனிக்கு கையில் செல்போனை எடுத்து செல்வது பிடிக்காது. தோனியிடம் இருக்கும் பல தகுதிகள் ரோஹித் சர்மாவிடம் உள்ளது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக திகழ்வார்.
பயோ பபுள் காரணமாக தான் விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். ஒருநாள், டி20 யிலிருந்து விலகியது சரியான முடிவு. ஆனால் டெஸ்டில் இன்னும் 2 ஆண்டுகள் கேப்டனாக இருப்பார் என நினைத்தேன். எனினும், இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அதனை நான் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.