ஸ்டோக்ஸுடன் ஹர்திக்கை ஒப்பிடுவதா? - ரஷீத் லத்தீஃப் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி!

Updated: Thu, Sep 22 2022 16:18 IST
'I don't think you can even compare them. Stokes is way ahead': Ex-Pakistan captain's blunt verdict (Image Source: Google)

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா. இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான வீரர் மட்டுமல்லாது மேட்ச் வின்னரும் கூட. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான பவுலிங் என அனைத்துவகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர். 

அதன்விளைவாக, மீண்டும் இந்திய அணியில் ஒரு ஆல்ரவுண்டராக தனக்கான இடத்தை பிடித்த ஹர்திக் பாண்டியா, டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் முக்கியமான வீரராக பார்க்கப்படுகிறார். அவரது கெரியரில் சிறந்த ஃபார்மில் இப்போது உள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 30 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்து மிரட்டினார்.  இந்நிலையில், சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிடப்படுவதுடன் இருவரில் யார் சிறந்த ஆல்ரவுண்டர் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீஃப், “ஹர்திக் பாண்டியாவை பென் ஸ்டோக்ஸுடன் ஒப்பிட முடியாது. அவர் உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களிலும் டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். எனவே பென் ஸ்டோக்ஸுடன் ஹர்திக் பாண்டியாவை ஒப்பிடவே முடியாது. கோப்பை கோப்பை தான். ஸ்டோக்ஸ் பெரிய தொடர்களில் சிறப்பாக ஆடி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். எனவே ஹர்திக் பாண்டியாவை விட கண்டிப்பாக ஸ்டோக்ஸ்தான் சிறந்த ஆல்ரவுண்டர்” என்று கருத்து கூறியுள்ளார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை