டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் விளையாடுவது கடினம் தான் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Sun, Aug 14 2022 11:50 IST
Image Source: Google

ரோஹித் சர்மா தலைமையில் வெற்றி நடைபோட்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக இந்த மாத இறுதியில் துவங்கும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் அக்டோபர் மாதம் துவங்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என இரு பெரும் தொடர்களை எதிர்கொள்ள உள்ளது.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மிக மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. கடந்த தொடரை போல் எதிர்வரும் தொடரிலும் இந்திய அணி சொதப்பிவிட கூடாது என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதே போல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாததால், யார் யாருக்கு இடம் கொடுக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், தற்போதைய இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்வரும் டி20 உலகக்கோப்பை குறித்தும் பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி வீரர் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா.. கிடைக்காத.. என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,“சஞ்சு சாம்சனுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சு சம்சனை சமூக வலைதளங்களில் தீவிரமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் என்னை பொருத்தவரையில் உலகக் கோப்பை தொடர்கான இந்திய அணியில் தேர்வாகும் பந்தயத்தில் சஞ்சு சாம்சன் சற்று பின்தங்கியே உள்ளார். 

இவர் உலக கோப்பை தொடருக்குப்பின் பங்கேற்ற 6 போட்டிகளில் ஆவரேஜ் 44 ஸ்ட்ரைக் ரேட் 158 உள்ளது. இவருக்கு சில வாய்ப்புகளே உள்ளது என்று கூறலாம், ஐபிஎல்லில் இவர் 17 போட்டிகளில் விளையாடி 458 ரன்கள் அடித்துள்ளார். அதில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 147 ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் இவர் இது அனைத்துமே டாப் ஆர்டர் பேட்ஸ்மனாக செயல்பட்ட போது எடுத்த ரன்கள். ஆனால் இவருக்கு ஒருவேளை உலகக்கோப்பை தொடரில் வாய்ப்பு கிடைத்தால் அது மிடில் ஆர்டரில் தான் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை