ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்!

Updated: Wed, Jan 31 2024 14:10 IST
ரோஹித் சர்மா செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்- மைக்கேல் வாகன்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இத்தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்ம குறித்த விமர்சனங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில், ஒல்லி போப் தனி ஒருவராக அணியை வலிமையான இலக்கை நோக்கி அழைத்துச்சென்றார். ஆனால் இந்திய அணி வீரர்களால் ஒல்லி போப்பை தடுக்க முடியாமல் தடுமாறினர். அதிலும் அவர் கொடுத்த கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளனர். இதற்கு கேப்டனாக ரோஹித் சர்மா சரிவர செயல்படாததே காரணம் என குற்றஞ்சாட்டுகளும் எழுந்து வருகின்றது.

அந்த வகையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள மைக்கேல் வாகன், “இந்திய டெஸ்ட் அணி விராட் கோலியின் கேப்டன்சியை பெரிதும் இழந்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் இந்திய அணி தோல்வியைத் தழுவி இருக்காது. ரோஹித் சர்மா ஒரு ஜாம்பவான் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தற்போது செயலிழந்து விட்டதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாகவும் மைக்கேல் வாகன் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை