நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த சதம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் - வெங்கடேஷ் ஐயர்!

Updated: Sun, Apr 16 2023 21:52 IST
I just didn’t want to let them settle: Venkatesh Iyer (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணியிடம் ஐந்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டாசை இழந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அணி முதல் இரண்டு விக்கட்டுகளை சீக்கிரத்தில் இழந்தாலும் அவர் அதைக் கண்டு கொள்ளாமல் அதிரடியில் ஈடுபட்டார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இறுதியாக 51 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கொல்கத்தா அணிக்காக அடிக்கப்பட்ட இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன்பு ஐபிஎல் முதல் சீசனின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக மெக்கல்லம் சதம் அடித்திருந்தார்.

போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது பெற்ற வெங்கடேஷ் ஐயர் கூறுகையில்,  “நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்த சதம் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனாலும் கூட நான் எனது முயற்சியில் மகிழ்ச்சி அடைகிறேன். அணி நிர்வாகம் எனக்கு கொடுத்த வேலை இதுதான். அந்த வேலையை நான் சரியாக செய்ய வேண்டும். வெளிப்படையாக சொல்வது என்றால் இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் வசதியாக இருந்தது. நீங்கள் ஆரம்பத்தில் 30, 40 ரன்கள் எடுத்து விட்டால் அதற்குப் பிறகு ரன் அடிப்பது எளிதானது.

சதம் அடிப்பது மகிழ்ச்சியானது. அவர்களின் முதல் இரண்டு பவுலர்களும் ஸ்விங் பவுலர்கள். அவர்களை செட்டில் ஆக விட்டால் பின்பு அடிப்பது கடினம். எனவே நான் ஆரம்பத்திலேயே அடித்து அவர்களை செட்டில் ஆக விடாமல் செய்ய வேண்டும் என்று விளையாடினேன். ஸ்விங் போன பின்பு அவர்களை விளையாடுவது எளிது. அணிக்காக நீங்கள் ஏதாவது செய்து விட்டால் உங்களின் எல்லா வலிகளையும் மறந்து விடுவீர்கள். 

பின்னோக்கி பார்க்கும் பொழுது நாங்கள் 15, 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். ஆனாலும் மும்பை விளையாடிய விதத்தில் நாங்கள் அந்த ரண்களை எடுத்து இருந்தாலும் அவர்கள் ஒன்று இரண்டு ஓவர்களில் எடுத்து இருப்பார்கள். இருந்தாலும் நாங்கள் ரண்களை குறைவாக எடுத்து விட்டோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை