லக்னோவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மகிழ்ச்சி  - ராஜத் படித்தார்!

Updated: Thu, May 26 2022 13:49 IST
 ‘I never feel any pressure’ – Rajat Patidar on his batting brilliance against LSG in Eliminator
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகளில் விளையாட குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் தகுதிபெற்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்திருந்த லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாடும் என்பதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமாகியிருக்கும் லக்னோ அணியின் ரசிகர்கள் ஒருபுறமும், 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் பெங்களூரு அணியின் ரசிகர்கள் ஒருபுறமும் இந்த வெற்றியை காண ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய பெங்களூர் அணியானது முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 207 ரன்களை குவிக்கவே லக்னோ அணியால் மீண்டும் 193 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியை சேர்ந்த இளம் வீரரான ரஜத் பட்டிதார் திகழ்ந்தார்.

முதல் ஓவரிலேயே கேப்டன் டு பிளேசிஸ் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது வீரராக களமிறங்கிய அவர் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தி 54 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 112 ரன்களை குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய ராஜத் படித்தார், “நான் இந்த போட்டியில் பந்தினை சரியாக பார்த்து அடித்தேன். ரன் குவிக்க வேண்டும் என்பதில் மட்டுமே எனது போக்கஸ் இருந்ததால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது.

இந்த போட்டியில் பவர் பிளேவின் கடைசி ஓவரை க்ருனால் பாண்டியா வீசினார். அவரது பந்து வீச்சில் நான் அடித்து நொறுக்கியது எனக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தது. அந்த நம்பிக்கையை அப்படியே போட்டியின் இறுதி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் இந்த போட்டியில் நான் பல சிறப்பான ஷாட்டுகளை விளையாடினேன். இந்த போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் நான் பிரஷரை உணரவில்லை எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

அதுமட்டுமின்றி டாட் பால் விளையாடினாலும் அதனை சரி செய்யும் அளவிற்கு என்னுடைய அதிரடி இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தது மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை