விராட் கோலியின் நூறாவது டெஸ்டுக்கு இந்திய ஜாம்பவான்களில் வாழ்த்து!

Updated: Wed, Mar 02 2022 21:30 IST
'I saw something similar with Dravid between 2002-2005': Ganguly makes huge prediction about Kohli a (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வரும் 4ஆம் தேதி தனது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை இலங்கையுடன் மோதுகிறார். முதலில் பார்வையாளர்களை அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவித்த பிசிசிஐ பின்னர் தனது முடிவிலிருந்து பின்வாங்கியது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விராட் கோலிக்கு இந்திய அணியின் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காணொளி வெளியிட்டுள்ள சச்சின், “ஆஸ்திரேலிய தொடரில் விளையாடிய போது தான் விராட் கோலி குறித்து முதலில் கேள்வி பட்டேன்.அனைவரும் அப்போது விராட் கோலி பற்றியே பேசினர். 100ஆவது டெஸ்ட்க்கு வாழ்த்துக்கள். இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள், உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை” என பாராட்டினார்.

பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “விராட் கோலி 10, 11 ஆண்டுகளுக்கு முன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஜூனியர் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கி இன்று பெரும் சாதனையை படைக்க உள்ளார். அவரது பயணம் மகத்தானது. பிசிசிஐ சார்பாகவும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்கிற முறையைலும் அவரை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “இந்திய அணியை தனி ஆளாக தூக்கி நிறுத்தியவர் விராட் கோலி, கேப்டனாக 5, 6 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 100 டெஸ்ட் விளையாடி சராசரி 50க்கு மேல் வைத்திருப்பது எல்லாம் பெரும் சாதனை. விராட் கோலியின் உடல் தகுதியை பார்த்து சொல்கிறேன். அவர் இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவார்” என்று தெரிவித்தார்.

முன்னாள் வீரர் சேவாக் வெளியிட்டுள்ள பதிவில், “பண்டிகை என்றால் ஹோலி, பேட்டிங் என்றால் அது கோலி. உங்களுடைய சாதனையை நினைத்து தேசமே பெருமை கொள்கிறது என்று” பாராட்டினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை