ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

Advertisement

முன்னதாக டாஸ் வென்று முதலில் விளைடாடிய இந்திய அணியினர் 49.1 ஓவர்களில் 213 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரன்களும் இஷான் கிஷன் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஆல்ரவுண்டரான தனஞ்செயா டிசில்வா 41 ரண்களும் வெல்லலாகே 42 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு புள்ளிகளை பெற்ற இந்திய அணி இந்த ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளை நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 17ஆம் தேதி இந்திய அணியுடன் ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய இலங்கை அணியின் கேப்டன் தஷன் ஷனகா, “ஆடுகளம் இவ்வாறு பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் களம் இறங்கிய பிறகு ஆடுகளத்திற்கு ஏற்றவாறு எங்களை அட்ஜஸ்ட் செய்து கொண்டோம். வெல்லலாகே, தனஞ்செயா மற்றும் அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

எங்கள் அணியில் இருக்கும் சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் வலை பயிற்சியின் போது சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுடைய பொட்டன்ஷியல் என்ன என்று எனக்குத் தெரியும் . அதனால் இன்றைய போட்டியில் அவர்களை பயன்படுத்தினேன். வெல்லலாகே வங்கதேசம் அணியுடன் போட்டியின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் ஸ்பெஷல் ஆக ஏதாவது ஒன்றை செய்வார் என்று எதிர்பார்த்தேன்.

Advertisement

அதேபோல விராட் கோலியின் விக்கெட்டைநேற்றைய போட்டியில் வீழ்த்தினார். அப்போதே எனக்குத் தெரிந்தது இந்த நாள் அவருடைய நாளாக இருக்கும் என்று.அதனைத் தொடர்ந்து மேலும் சில விக்கெட்டுகளை கைப்பற்றி தன்னுடைய மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்” என தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News