என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா!

Updated: Fri, May 17 2024 15:30 IST
என்னுடைய கேப்டன்சி மிகவும் எளிமையானது - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 67ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்ட நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துவது மிகவும் கடினம்.

இப்போட்டிக்காக இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது கேப்டன்சி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “எனது கேப்டன்சி மிகவும் எளிமையானது என்று நான் நினைக்கிறேன். நான் அணியில் உள்ள 10 பேருடன் சேர்ந்து விளையாடுகிறேன் அவ்வளவுதான். இந்த மந்திரம் மிகவும் எளிமையானது. நீங்கள் நம்பிக்கையையும், அன்பையும் கொடுக்க வேண்டும்.

நான அவர்களிடம் கேட்பதேல்லாம் ஒன்று தான். அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் தங்களது 100 சதவீத ஈடுபாட்டையும் கொடுக்க வேண்டும். மேலும் நான் கேப்டனாக வெற்றி, தோல்விகளை பற்றி கவலைபடுபவன் கிடையாது. ஆனால் நான் போட்டியின் அணுகுமுறைபடி விளையாட வேண்டும் என எண்ணுகிறேன். அதனால் எங்கள் அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் எவ்வாறான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள் எனறு பார்க்க ஆசைபடுகிறேன். ஏனெனில் அது அணியின் வெற்றிக்கு எந்தவகையில் உதவும் என்பதை பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், பேட்டிங்கில் 200 ரன்களையும், பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை