டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் - ரசிகர்களிடன் வாங்கிக்கட்டிக் கொண்ட சோயிப் அக்தர்!

Updated: Wed, Oct 26 2022 13:23 IST
Image Source: Google

கடந்த 3 ஆண்டுகளாக விராட் கோலி ஒரு ஆட்டத்தில் கூட சதம் விளாச வில்லை. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசினார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள் எல்லாம் தற்போது பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் சோயிப் அக்தர், “பாகிஸ்தானுக்கு எதிராக அவர் வாழ்நாளில் சிறந்த இன்னிங்சை விளையாடி இருக்கிறார். என்னால் முடியும் என்று நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் அவருடைய ஆட்டம் அமைந்தது. விராட் கோலி கடந்த 3 ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனத்தை சந்தித்தார்.

கோலி ரன்களை சரிவர அடிக்கவில்லை. அவருடைய கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. பலத்தரப்பு மக்கள் அவரை பல விதமாக பேசினார்கள். சில தரப்பினர், அவருடைய குடும்பத்தினரை எல்லாம் இழுத்து அவரது மனதை காயப்படுத்தினார்கள். ஆனால், கோலி எதையும் பற்றி கவலைப்படாமல் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்தி இருக்கிறார்.

அதுவும் தீபாவளிக்கு முதல் நாள் அவருடைய ஆட்டம் பட்டாசு போல் அமைந்தது. டி20 உலககோப்பை போன்ற ஒரு தொடரில் அவர் ஃபார்ம்க்கு திரும்பி கலக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார் என நினைக்கிறேன். கோலி என்ற மன்னன் திரும்ப வந்துவிட்டார். அவருக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த கிரிக்கெட் வீரர்.

இந்த தருணத்தில் கோலிக்கு நான் ஒரு அறிவுரை வழங்குகிறேன். டி20 கிரிக்கெட் என்பது நமது அனைத்து சக்தியை திரட்டி விளையாட வேண்டும். அவருடைய முழு சக்தியையும்டி20 கிரிக்கெட்டுக்கு செலவிடுவதை நான் விரும்பவில்லை. இதே போன்ற உத்வேகத்தை பயன்படுத்தி கோலி சர்வதேச ஒருநாள் போட்டியில் 3 சதங்கள் அடித்திருக்கலாம். அதனால் தான் விராட் கோலி விரைவில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சோயிப் அக்தரின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடி வருவதால், அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோய் வருகிறது. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி தொடர்களில் கோலி அதிக அரைசதம் அடித்திருக்கிறார். இதனை கருத்தில் கொண்ட தான் அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று சோயிப் மாலிக் கூறுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் கோலியை பொறத்தவரை 2024ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலககோப்பையில் விளையாட திட்டமிட்டு இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை