எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் - ஆயூஷ் பதோனி

Updated: Fri, Apr 28 2023 22:33 IST
Image Source: Google

16ஆவது ஐபிஎல் தொடரின் 38ஆவது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன. பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டனான கே.எல் ராகுல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கெய்ல் மெயர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 24 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த அயூஸ் பதோனி – ஸ்டோய்னிஸ் ஜோடி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அசுர வேகத்தில் ரன் குவித்தது. 

அயூஸ் பதோனி 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த போதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டோய்னிஸ் 40 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த போதிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரனும், தன் பங்கிற்கு பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள லக்னோ அணி 257 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் தனது அதிரடி குறித்து பேசிய ஆயூஷ் பதோனி, “எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று எனக்கு அந்த தருணம் கிடைத்தது. இதனை நான் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அணிக்காக பங்களிப்பு அளித்ததை மிகவும் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். நான் பேட்டிங் செய்ய களத்திற்கு சென்ற போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. எனவே இன்னிங்ஸ் முழுவதும் நின்று விளையாட வேண்டும் என நினைத்தேன்.

நான் களத்துக்கு செல்லும்போது எங்கள் அணி நிர்வாகம் என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட சொன்னார்கள். உன்னுடைய ஷாட்களை அடித்து மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட சொன்னார்கள். நாங்கள் களத்தில் விளையாடும் போது சாதனை இலக்கை தொட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. மோசமான பந்தை அடித்து ஆட வேண்டும்.

ஒவ்வொரு பந்துக்கும் ஏற்ப வகையில் ரன்கள் சேர்க்க வேண்டும் என்று தான் நினைத்தோம்.நான் களத்துக்கு செல்லும் போது என் மனதை காலியாக தான் வைத்திருந்தேன். எங்கள் அணி நிர்வாகம் மோசமான பந்தை அடித்து ஆட சொன்னார்கள். அதற்கு கிடைத்த வெற்றி ஆக தான் இதனை கருதுகிறேன்” என்று ஆயுஷ் பதோனி கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை