அடுத்த சீசனில் நிச்சயம் இருப்பேன் - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Tue, May 24 2022 15:59 IST
I will definitely be around IPL next year: AB de Villiers (Image Source: Google)

ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத ஆர்சிபி அணி, வழக்கம்போலவே இப்போது நடந்துவரும் 15ஆவது சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் என்ற 2 மிகப்பெரிய வீரர்கள் இணைந்து ஆடியும் ஆர்சிபிக்கு கோப்பை கைகூடவில்லை.

2011ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை 11 சீசன்கள் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடிய டிவில்லியர்ஸ், அந்த அணிக்காக 156 போட்டிகளில் ஆடி 4,491 ரன்களை குவித்துள்ளார். இந்த சீசனில் அவர் ஆடாதது ஆர்சிபி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அவர் இல்லாத குறையை ஃபினிஷிங்கில் தினேஷ் கார்த்திக்கும், தென்னாப்பிரிக்க வீரராக டுப்ளெசிஸ் கேப்டன்சியிலும் நிரப்பி, குறையை தீர்த்துவிட்டனர்.

ஆனாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடும் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸின் அதிரடி பேட்டிங்கை ரசிகர்கள் மிஸ் செய்தனர். இதற்கிடையே, டிவில்லியர்ஸ் அடுத்த சீசனில் கண்டிப்பாக ஆர்சிபி அணியில் ஏதாவது ஒரு விதத்தில் அங்கம் வகிப்பார் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்து பேசியுள்ள டிவில்லியர்ஸ், “நான் அடுத்த சீசனில் அங்கம் வகிப்பேன் என்பதை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் மகிழ்ச்சி. ஆனால் இதுதொடர்பாக நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் அடுத்த சீசனில் கண்டிப்பாக ஏதாவது ஒரு விதத்தில் அங்கம் வகிப்பேன். அது என்னவென்று தெரியவில்லை. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிவதை பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை