ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்வேன் - ஆதில் ரஷித்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
மெல்போா்னில் நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சோ்க்க, அடுத்து இங்கிலாந்து 19 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து உலக சாம்பியன் ஆனது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளை வென்றார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரண்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஆதில் ரஷித், அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். இந்தமுறை ஐபிஎல் ஏலத்தில் என்னுடைய பெயரைக் கொடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 34 வயதாகுல் ஆதில் ரஷித் இங்கிலாந்து அணிக்காக 118 ஒருநாள், 92 டி20 ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும் இதுவரை ஒரே ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.