ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானுடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - ரோஹித் சர்மா!

Updated: Mon, Aug 29 2022 08:38 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஷ்வான் மட்டுமே சிறப்பாக விளையாடி 43 ரன்களை சேர்த்தார். அடுத்து 4ஆவது இடத்தில் களமிறங்கிய அஃப்திகார் அகமதும் 28 ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார். 

பாபர் அசாம் 10, பக்கர் ஸமான் 10 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் பௌலர்கள் ஹரிஸ் ரௌப் 13, தஹானி 16 ஆகியோர் கொஞ்சம் ரன்களை அடித்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147/10 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4/26, ஹார்திக் பாண்டியா 2/33 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 12, கே.எல்.ராகுல் 0 ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அடுத்து விராட் கோலி 35, ஜடேஜா 35, ஹார்திக் பாண்டியா 33 ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தியதால், இந்தியா 19.4 ஓவர்களில் 148/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

குறிப்பாக கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹார்திக் சிக்ஸர் அடித்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில் இப்போட்டி முடிந்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்த்திக் பாண்டியாவின் செயல்பாடு குறித்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தானை 147 ரன்களுக்குள் சுருட்டியதும், வெற்றியைப் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. முழுமையாக எங்களை நம்பினோம். அதற்கு கிடைத்த பரிசுதான் இது. அனைத்து வீரர்களும் தனித்தனியே ரோல் இருந்தது. போட்டிக்கு முன்பு, இதனை விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டேன். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், எப்பேர்ப்பட்ட காலநிலையிலும் பந்துவீச முடியும். 

ஹார்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்து வந்தப் பிறகு அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவர் காயம் காரணமாக அவதிப்பட்டபோது, தன்னுடைய வீக்னஸ் எது என்பதை அறிந்து, அதனை சரி செய்தார். தற்போது 140+ வேகத்தில் அசால்ட்டாக பந்துவீசுகிறார். பேட்டிங்கிலும் எவ்வித குறையும் இல்லை. ஷார்ட் பால்களை அற்புதமாக வீசுகிறார்’’ என பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை