ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “இன்றைய ஆட்டத்தில் மைதானம் நேரம் செல்ல செல்ல மெதுவாக இருந்தது. சிஎஸ்கே அணியில் ஷிவம் தூவே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு நாங்கள் ஆஃப் கட்டர்களை வீச விரும்பினோம், அந்த வகையில் அவரையும் வீழ்த்தி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினோம்.

 

என்னைப் பொறுத்தவரையில் போட்டியில் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளை கைப்பற்றுவதே முக்கியம். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன். இப்போட்டிக்கு வந்திருந்த ரசிகர்களின் ஆதரவு அற்புதமான ஒன்று. அதிலும் குறிப்பாக, எம் எஸ் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கும் போது கேட்ட சத்தம் போன்று ஒன்றை நான் இதுவரைகேட்டதே கிடையாது” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News