அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும் - இப்ராஹிம் ஸத்ரான்!

Updated: Mon, Jan 15 2024 11:29 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆஃப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 15.4 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு பின்னர் பேசிய ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான், “இந்த போட்டியில் இன்னும் சற்று அதிகமாக ரன்களை குவித்திருக்க வேண்டும். எங்களுடைய இன்றைய ஆட்டத்தில் தொடக்கம் நன்றாக இருந்தாலும் அதனை அப்படியே கொண்டு செல்ல முடியவில்லை. ஒருமுறை நாங்கள் துவக்க ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம்.

ஒருசில முறை மிடில் ஓவர்களில் நன்றாக விளையாடுகிறோம். ஒருசில முறை இறுதிகட்ட ஓவர்களில் சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால் டி20 போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமெனில் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அப்படி தவறுகளை செய்யாமல் சிறப்பாக விளையாடினால் மட்டுமே டி20 உலக கோப்பையை கைப்பற்ற முடியும்.

குல்பதீன் நயிப் எங்கள் அணியில் உள்ள சீனியர் வீரர். அவர் மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர் சில ஷாட்களை பவர்பிளே ஓவர்களில் அடிக்க ஆரம்பித்து விட்டால் நிச்சயம் அதனை இன்னிங்ஸ் முழுவதும் எடுத்துச் செல்வார் என்று நம்புவதாக” கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை