சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் சாதனையை முறியடித்த இப்ராஹிம் ஸத்ரான்!

Updated: Wed, Feb 26 2025 19:37 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸ் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்களைக் குவித்தது. 

அதன்படி, இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், செதிகுல்லா அடல் மற்றும் ரஹ்மத் ஷா ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அந்த அணி 37 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் ஸத்ரானுடன் இணைந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகமது நபி ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் சத்ரான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 177 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 41 ரன்களையும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி மற்றும் முகமது நபி ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்ததன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி இந்தா இமாலய இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இப்ராஹிம் ஸத்ரான் சில சாதனைகளையும் படைத்துள்ளார். இப்போட்டியில் ஸத்ரான் 177 ரன்களைக் குவித்ததன் மூலம், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை குவித்த வீரர் எனும் பென் டெக்கட்டின் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பென் டக்கெட் 165 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தனிநபர் அதிகபட்ச ரன்கள்

  • இப்ராஹிம் ஸத்ரன் (ஆஃப்கானிஸ்தான்) -  177 ரன்கள் vs இங்கிலாந்து (2025)
  • பென் டக்கெட் (இங்கிலாது) - 165 ரன்கள் vs ஆஸ்திரேலியா (2025)
  • நாதன் ஆஸ்டல் (ஆஸ்திரேலியா) - 145*vs அமெரிக்கா (2004)
  • ஆண்டி ஃப்ளவர் (ஜிம்பாப்வே) - 145 இந்தியா (2002)
  • சவுரவ் கங்குலி (இந்தியா) - 141 vs தென் ஆப்பிரிக்கா (2000)

இதுதவிர்த்து இப்போட்டியின் மூலம் ஆஃப்கானிஸ்தானுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோரை குவித்த வீரர் எனும் தன்னுடையை சாதனையையும் இப்ராஹிம் ஸத்ரான் முறியடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இப்ராஹிம் ஸத்ரான் 162 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தா நிலையில், தற்போது 177 ரன்களைக் குவித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்கள்

  • 177 -இப்ராஹிம் ஸத்ரான் vs இங்கிலாந்து, 2025
  • 162 -இப்ராஹிம் ஸத்ரான் vs இலங்கை, 2022
  • 151 -ரஹ்மானுல்லா குர்பாஸ் vs பாகிஸ்தான், 2023
  • 149*-அஸ்மத்துல்லா ஒமர்சாய் vs இலங்கை, 2024
  • 145 -ரஹ்மானுல்லா குர்பாஸ் vs வங்கதேசம், 2023

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டன், அதில் ரஷித், மார்க் வுட்

Also Read: Funding To Save Test Cricket

ஆஃப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், செதிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கே), அஸ்மதுல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபாருக்கி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை