டி20 உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்நோக்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி!

Updated: Sat, Jul 17 2021 12:07 IST
ICC Announces Groups For T20 World Cup, India Set To Face Pakistan (Image Source: Google)

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடர் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக,  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபாய், அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. 

இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமிபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர எட்டு அணிகளுடன் சேர்ந்துவிடும். 

முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறும். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் பிசிசிஐயின் சார்பாகவே டி20 உலகக் கோப்பை நடைபெறும் என்று ஐசிசியும் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை சர்வதேச டி20 தரவரிசையின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரு பிரிவுகளாகப் பிரித்துள்ளது.

அதன்படி குரூப் 1 பிரிவில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று ஆட்டங்களில் தேர்வாகும் இரு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இந்தச் சுற்றுக்கு சூப்பர் 12 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப் பிரிவில் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

அதேபோல் தகுதிச்சுற்று போட்டிகளில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

தகுதிச்சுற்று 

குரூப் ஏ: இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா

குரூப் பி: வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா

சூப்பர் 12

குரூப் 1: வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா 

குரூப் 2: இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை