உலக டெஸ்ட் சாம்பியன்ஷில் தொடருக்கான புள்ளி வழங்கீட்டு விதிமுறைகளை வெளியிட்ட ஐசிசி!

Updated: Wed, Jul 14 2021 14:18 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரை இந்திய ரசிகர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். ஏனெனில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்நிலையில் 2021 முதல் 2023 வரையிலான டெஸ்ட் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடத்தப்படவுள்ளது

இந்நிலையில் இத்தொடருக்கான புதிய புள்ளி வங்கீட்டு விதிமுறைகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த தொடரில், அணிகள் ஒவ்வொன்றும் பெரும் புள்ளிகளின் சதவிகிதத்தின் அடிப்படையில், டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் 12 புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு அணி வெற்றிப் பெறும் பட்சத்தில், அந்த அணிக்கு 100 விழுக்காடு அதாவது 12 புள்ளிகள் அப்படியே வழங்கப்படும். ஒருவேளை போட்டி டை (சமன்) ஆகும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் 6 புள்ளிகளாக பகிர்ந்தளிக்கப்படும். 

அதேசமயம், ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி டிரா ஆகும் பட்சத்தில், 4 புள்ளிகள் (33.33 விழுக்காடு) வழங்கப்படும். மேலும் இந்த மொத்த புள்ளிகள் என்பது ஒவ்வொரு தொடருக்கும் வேறுபடும். அதாவது ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து புள்ளிகள் எண்ணிக்கை மாறுபடும். அதன்படி,

    2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 24 புள்ளிகள்
    3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 36 புள்ளிகள்
    4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 48 புள்ளிகள்
    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 60 புள்ளிகள்

என்று இவ்வாறு மொத்த புள்ளிகள் தொடருக்கு ஏற்ப மாறுபடும்.

இதுகுறித்து ஐசிசி தற்காலிக தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், "முந்தைய புள்ளிகள் முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த புதிய முறை மூலம், எங்களுக்கு எல்லா அணிகளையும் எளிதில் ஒப்பிட்டு பார்க்க வழிவகை கிடைத்திருக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு தொடரிலும், அவர்கள் எத்தனை போட்டியில் விளையாடியிருந்தாலும் அவர்களது செயல்திறனை எங்களால் அறிய முடியும்" என்று கூறியுள்ளார்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை