ஐசிசி மேலாளராக வாசிம் கான் நியமனம்; பிசிசிஐக்கு சிக்கல்!
ஐசிசி என்றால் இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு இந்தியாவின் பவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருக்கும். பிசிசிஐ வைத்தால் தான் சட்டம், பிசிசிஐ நினைத்தது தான் ஐசிசியில் நடக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தேதே. உலகிற்கு எப்படி அமெரிக்காவோ, ஐசிசிக்கு பிசிசிஐ.
அதற்கு காரணம்,இந்தியாவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து ஐசிசியின் சக்கரமே ஓடுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ சில விசயங்களில் அளவுக்கு மீறி செய்யும் சில சம்பவங்கள் மற்ற நாடுகளுக்கு எரிச்சலை தந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடத்தும் ஐசிசி தொடருக்கு வரியை பிசிசிஐ செலுத்தாது என்று அறிவித்து, ஐசிசி தான் அதனை செலுத்த வேண்டும் என்று கூறியது. இதற்கு வேறு வழியின்றி ஐசிசியும் ஒப்பு கொண்டது.
இதனால் இந்தியாவின் ஆதிக்கத்தை அடக்க, மற்ற நாடுகள் பாகிஸ்தான் பக்கம் திரும்பி அதரவு வழங்க தொடங்கியது. இதன் விளைவாக இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 2025 சாம்பியன்ஸ் கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில், ஐசிசியின் பொது மேலாளர் பதவியில் இருந்த அலார்டைஸ், சி.இ.ஓ.வாக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து பொது மேலாளர் பொறுப்புக்கு கங்குலி அல்லது ஜெய்ஷா வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் கானுக்கு பொது மேலாளர் பதவி கிடைத்துள்ளது.
இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இனி ஐசிசி, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இருத்தரப்பு தொடரையோ, டெஸ்ட் தொடரையோ நடத்தினால், அதில் இந்தியா பங்கேற்றே தீர வேண்டும். இதற்கு இந்தியா ஒப்பு கொள்ளவில்லை என்றால்,இறுதிப் போட்டிகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு பறிபோகும்.