ஐசிசி தொடர்களை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம்!

Updated: Mon, Jul 05 2021 18:53 IST
ICC Begins Process To Identify Hosts For White-Ball Events Post 2023 (Image Source: Google)

நடப்பாண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு, பின்னர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் 2023 முதல் 2031 வரையிலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2024 முதல் 2031 வரை ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் 20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. 

அதில் ஆடவர் பிரிவில் எட்டு ஒருநாள் மற்றும் டி20 ஐசிசி போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்த இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக ஐசிசி இன்று தெரிவித்துள்ளது.

அதன்படி ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, மலேசியா, நமிபியா, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் ஐசிசி போட்டிகளை நடத்த ஆரம்பக்கட்ட விண்ணப்பங்களை அளித்துள்ளன. 

அடுத்தக்கட்டமாக கூடுதல் விவரங்களுடன் முழுமையான விண்ணப்பங்களை அனுப்புவார்கள். இதன்பிறகு ஐசிசி போட்டிகளை எங்கு நடத்துவது என்கிற முடிவு எடுக்கப்படும் என ஐசிசி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2024-2031-ல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்

  • 2024 -  ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
  • 2025 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
  • 2026 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
  • 2027 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை
  • 2028 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
  • 2029 - ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
  • 2030 - ஆடவர், மகளிர் டி20 உலகக் கோப்பை
  • 2031 - ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கோப்பை
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை