ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: லாகூரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கரவாத தாக்குதலையடுத்து அத்தொடர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வருவதுடன், இரு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறது.
அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்தான் என்ற தகவல்களும் வெளியேயுள்ளனர். இருப்பினும் சமீபத்தில், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ரோஹித் மற்றும் விராட் கோலி நிச்சயம் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
மேலும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01ஆம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.