புதிய விதிமுறைகளை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!

Updated: Tue, Sep 20 2022 19:46 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது ஐசிசி. அதன்படி டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் வீச ஓர் அணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால் மீதமுள்ள ஓவர்களில் வட்டத்துக்குள் கூடுதலாக ஒரு வீரரை நிறுத்த வேண்டும். இந்த நடைமுறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடரவுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்த விதிமுறை அமலுக்கு வரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிமிட்டி,  ஐசிசி நிர்வாகக்குழுவுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

ஐசிசியின் புதிய விதிமுறைகள்

  • பந்தை வீரர்கள் தங்கள் எச்சில் கொண்டு பாலிஷ் செய்யும் முறை கரோனா காலத்தில் இருந்து தடை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடை இனிமேல் நிரந்தரமாகியுள்ளது. அதாவது இனிமேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எந்த வீரரும் தங்களின் எச்சில் மூலம் பந்தை பாலிஷ் செய்யக் கூடாது.
  • ஒரு பேட்ஸ்மேன் பந்தை தூக்கி அடிக்கும்போது, பவுண்டரி எல்லைக்கோ அல்லது உயரமாகவோ செல்கிறது. அந்த நேரத்தில் பேட்ஸ்மேன் ரன் ஓடி நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு வந்தபின் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்து விடுகிறார். அதன்பின் களமிறங்கும் புதிய பேட்ஸ்மேன் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு செல்வதுதான் நடைமுறையில் இருந்தது. இனிமேல், அவ்வாறு நடந்தால், புதிதாக வரும் பேட்ஸ்மேன் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு செல்லாமல், நேராக பந்தை சந்திக்கும் ஸ்ட்ரைக்கர் பகுதிக்குச் செல்ல வேண்டும். அதாவது, பாதி கிரீஸை கடந்து விட்டாலே நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு செல்ல வேண்டும் என்ற முறை இனிமேல் இல்லை. 
  • களத்தில் இறங்கும் புதிய பேட்ஸ்மேன் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் 2 நிமிடங்களுக்குள் ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு வந்து பேட்டிங் செய்யத் தயாராக இருக்கவேண்டும். டி20 போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்துவிட்டால் அடுத்துவரும் பேட்ஸ்மேன் 90 நிமிடங்களுக்குள் பேட்டிங் செய்யத் தயாராகிவிட வேண்டும்.
  • மன்கட் அவுட் என்பது ஐசிசி விதிமுறையின்படி அங்கீகரி்க்கப்பட்டது என்றாலும், கிரிக்கெட்டின் தார்மீக தர்மத்தின்படி, அது ஏற்கப்படவில்லை. ஆனாலும் மன்கட் அவுட் செய்து பந்துவீச்சாளர் அப்பீல் செய்தால், அது 3ஆவது நடுவரால் பரிசீலிக்கப்பட்டு அவுட் என்றால் வழங்கப்படும்.இந்த மன்கட் முறை பல்வேறு சர்ச்சைகளையும் விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில்ஏற்படுத்தியது. இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் கூட, மன்கட் முறை ஐசிசி விதிப்படி சரியானது என்று வாதிட்டார். ஐசிசியின் புதிய விதிப்படி இனிமேல் மன்கட் அவுட் என்பது, “ரன்அவுட்” என்றே அழைக்கப்படும். 
  • பேட்ஸ்மேனை அச்சுறுத்தும் வகையில் வீசப்படும் பந்தால் பேட்ஸ்மேன், ஆடுகளத்தை விட்டு நகர்ந்தால் அந்த பந்து “ டெட் பால்” என்று அழைக்கப்படும்.
  • ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச ஓடத் தொடங்கிவிட்டாலே, களத்தில் உள்ள பீல்டர்கள் அனைவரும் தாங்கள் நிற்கும் இடத்திலிருந்து நகரக்கூடாது. அவ்வாறு பேட்ஸ்மேன் கவனத்தை திருப்பும் வகையில் பீல்டர்கள் நகர்வதை நடுவர் கண்டுபிடித்தால், 5 ரன்கள் அபராத விதிக்கப்பட்டு அதை பேட்டிங் செய்யும் எதிரணிக்கு நடுவர் வழங்கலாம். அந்த பந்தையும் “ டெட் பால்” என அறிவிக்கலாம்.
  • ஒரு பேட்ஸ்மேன் பந்தை ஸ்ட்ரைக் செய்து அந்த பந்தை பந்துவீச்சாளர் பிடித்து, க்ரீஸை விட்டு பேட்ஸ்மேன் வெளியே வந்துவீட்டார் என்பதற்காக ரன்அவுட் செய்யும் நோக்கில் எரிவது கூடாது.  அவ்வாறு ரன்அவுட் செய்ய முயன்றாலும் அது ஏற்கப்படாது. முன் ஒரு பந்துவீச்சாளர் பந்துவீச வரும்போது அவரின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேட்ஸ்மேன் இறங்கி வந்து அடிக்க முற்படுவார். அப்போது பந்தை விக்கெட் கீப்பரிடம் வீசி ரன் அவுட் செய்யலாம். இந்த முறை இனிமேல் “ டெட் பால்” என கருதப்படும். 
  • டி20 போட்டிகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசும் அணிஓவர்கள் அனைத்தையும் வீசி முடித்திருக்க வேண்டும்.அவ்வாறு வீசாவிட்டால் எத்தனை ஓவர்கள் மீதம் இருக்கிறதோ அந்த ஓவர்கள் வரை 30-யார்ட் வட்டத்துக்கு வெளியே நிற்கும் பீல்டர்களில் ஒருவர் உள்ளே நிறுத்தப்படுவார்.

இந்த நடைமுறை டி20 போட்டிகளில் மட்டும் இருந்தது. இனிமேல், இது ஒருநாள் போட்டிகளிலும் நடைமுறைக்கு வரும். இது தற்போது நடைபெறும் ஐசிசி 50ஓவர்கள் உலகக் கோப்பைக்கான சூப்பர் லீக் போட்டி முடிந்தபின் நடைமுறைக்குவரும் என ஐசிசி தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை