டி20 உலகக்கோப்பை 2022: 100 நாட்கள் கவுன்ட் டவுன் தொடங்கியது!

Updated: Fri, Jul 08 2022 18:26 IST
ICC Men's T20 World Cup 2022 - 100-Day Countdown Begins (Image Source: Google)

ஐசிசியின் டி20 உலகக் கோப்பைப் போட்டி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 45 ஆட்டங்கள் நடக்கின்றன. 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உலகக் கோப்பை கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

தற்போது டி20 சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியாதான் போட்டித் தொடரை நடத்துகிறது. சாம்பியனாகஇருந்துகொண்டே டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா நடத்துவது இதுதான் முதல்முறை

இன்று புறப்படும் டி20 உலகக் கோப்பை, முதல் முறையாக பிஜி, பின்லாந்து, ஜெர்மனி, கானா, இந்தோனேசியா, நமிபியா, நேபாளம், சிங்கப்பூர், வனூட்டு ஆகிய நாடுகளுக்கு செல்கிறது. மொத்தம் 13 நாடுகளில் 35 இடங்களில் காட்சிக்காக கோப்பை வைக்கப்படுகிறது. 

100 நாட்கள் கவுன்ட் டவுனைக் குறிக்கும் வகையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலிருந்து இந்த கோப்பை புறப்படுகிறது. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச், ஜார்ஜியா வார்ஹம், டைலா விலாம்னிக், ஷேன் வாட்ஸன், வக்கர்யூனுஸ், மோர்ன் மோர்கல் உள்ளிட்ட பல வீரர்கள் ஐசிசி கோப்பை பயணத்தை தொடஹ்கி வைக்கிறார்கள் 

ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி ஜெப்அலார்டைஸ் கூறுகையில் “ ஐசிசி டி20 உலகக் கோப்பை  போட்டித் தொடரை கொண்டாடும் வகையில் கவுன்ட்டவுன் இன்று தொடங்குகிறது. முதல்முறையாகக கோப்பை 13 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்னும் போட்டித் தொடருக்கு 100 நாட்கள் மட்டுமே உள்ளன” எனத் தெரிவித்தார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை