ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசல் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 125 ரன்களைச் சேர்த்தி அசத்தினர்.

Advertisement

பின் 61 ரன்கள் எடுத்திருந்த பதும் நிஷங்கா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 78 ரன்களில் குசால் பெரேராவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் குசால் மெண்டிஸ் 9 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களுக்கும் என அட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா ஒருபக்கம் விக்கெட் இழக்காமல் களத்தில் இருக்க, மறுபக்கம் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 7, துனித் வெல்லாலகே 2, சமீகா கருணரத்னே 2, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமார ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

அதன்பின் இறுதிவரை களத்தில் இருந்த சரித் அசலங்காவும் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இலங்கை அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க வீரர்கள் மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினர். இதில் டேவிட் வார்னர் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தையும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்கச் செய்தார் தில்சன் மதுஷங்கா.

Advertisement

இதையடுத்து மார்ஷுடன் இணைந்த மார்னஸ் லபுஷாக்னேவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்காமல் தப்பினார். அதன்பின் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த நிலையில் 52 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தனது இன்னிங்ஸைத் தொடங்கினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஷ் இங்கிலிஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுஷாக்னே 40 ரன்கள் எடுத்த நிலையில் மதுஷங்கா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  

அதன்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்ல, மறுபக்கம் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களை எடுத்திருந்த ஜோஷ் இங்கிலிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸும் முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

Advertisement

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 35.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தங்களது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News