ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sun, Oct 15 2023 15:56 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் 5 முறை உலகசாம்பியனான ஆஸ்திரேலிய அணி இலங்கையை லக்னோவில் எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 2 லீக் ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வி கண்டுள்ளன.எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றை எட்ட வாய்ப்பு உள்ளது என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இலங்கை 
  • இடம்- ஏக்னா கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்து பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.  அதிலும் 5 முறை உலகக்கோப்பை வென்றுள்ள அந்த அணி இத்தொடரில் படுதோல்வியை சந்தித்துள்ளதால் அந்த அணி எஞ்சியுள்ள போட்டிகளில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் இருக்கும் பட்சத்திலும் அவர்கள் சரிவர ரன்களைச் சேர்க்காதது அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்துவரும் பட்சத்தில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், ஆடம் ஸாம்பா ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களும் இனிவரும் போட்டிகளில் சிறப்பக செயல்பட்டால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுப்பக்கம் இலங்கை அணிக்கு இத்தொடர் மிகமோசமான தொடராக மாறிவருகிறது. தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நட்சத்திர வீரர்களின் காயம் அணிக்கு பின்னடவை ஏற்படுத்திய நிலையில் தற்போது கேப்டன் தசுன் ஷனகாவும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது அணியை மேலும் பின்னடைவுக்கு தள்ளியுள்ளது. இதனால் இனிவரும் போட்டிகளில் குசால் மெண்டிஸ் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியின் பேட்டிங்கில் பதும் நிஷங்கா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, சரித் அசலங்கா ஆகியோர் இருப்பது அணியின் பேட்டிங் பலத்தைக் காட்டுக்கிறது. ஆனால் பந்துவீச்சில் மதீஷா பதிரானா ரன்களை வாரி வழங்கிவருவது அணிக்கு சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் நிச்சயம் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள்- 103
  • ஆஸ்திரேலியா - 63
  • இலங்கை - 36
  • முடிவில்லை - 04

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கே), ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இலங்கை: பதும் நிஷங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கே), சதிர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, சமீகா கருணரத்னே, துனித் வெலலாகே, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ் (துணை கேப்டன்), சதீர சமரவிக்ரம
  • பேட்ஸ்மேன்கள்- டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே, பதும் நிஷங்கா
  • ஆல்ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), தசுன் ஷனகா
  • பந்துவீச்சாளர்கள்- ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, தில்ஷன் மதுஷங்கா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை