ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Oct 06 2023 15:06 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் 
  • இடம் - ஹிமாச்சல் பிரதேஷ் கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
  • நேரம் - காலை 10.30 மணி (GMT 0500)

போட்டி முன்னோட்டம்

ஷாகில் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியில் பல சர்ச்சைக்கு மத்தியில் அனுபவ வீரர் தமீம் இக்பால் காயத்தால் விலகியுள்ளது பெரும்  பின்னடைவாகும். இருப்பினும் அணியின் பேட்டிங்கில் லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிக்கூர் ரஹிம், மெஹிதி ஹசன், தாஹித் ஹிரிடோய் போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு சற்று ஆறுதளித்துள்ளது.

அத்துடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத் ஆகியோர் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை திணறுடிக்கும் அளவுக்கு சிறந்த வேக்கப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் மெகிதி ஹசன், ஷொரிஃபுல் இஸ்லாம், தன்சின் ஷாகிப், ஹசன் மஹ்மத், நசுன் அஹ்மத் ஆகியோரும் வங்கதேசம் அணியின் பந்து வீச்சு துறையில் போராடுவதற்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் ஓரளவு அசத்தக்கூடிய நல்ல வீரர்கள் வங்கதேச அணியில் நிறைந்து இருக்கின்றனர்.

மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணியை பொறுத்த வரை பேட்டிங் துறையில் ரஹ்மத்துல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான் ஆகியோர் அதிரடியான தொடக்க வீரர்களாக அறியப்படுகிறார்கள். மேலும் மிடில் ஆர்டரில் ரியஸ் ஹசன், நஜிபுல்லா ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் நல்ல திறமையுடைய வீரர்களாக திகழ்கின்றனர். லோயர் மிடில் ஆர்டரில் முன்னாள் கேப்டன் முகமது நபி அனுபவம் மிகுந்தவராகவும் ஃபினிஷராகவும் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் தயாராக இருக்கிறார்.

அத்துடன் இக்ரம் அலிகில், ஓமர்சாய் ஆகியோர் ஓரளவு நல்ல ஆல் ரவுண்டர்களாக ஆஃப்கானிஸ்தானின் வெற்றிக்கு போராட காத்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவரையும் விட ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது ஆகிய 3 ஸ்பின்னர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். சொல்லப்போனால் அந்த 3 வீரர்களால் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் டாப் அணிகளுக்கு நிகராக ஆஃப்கானிஸ்தானின் சுழல் பந்து வீச்சு துறை மிகவும் வலுவானதாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

அதே சமயம் வேகப்பந்து வீச்சு துறையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, அப்துல் ரஹ்மான், நவீன்-உல்-ஹக் ஆகிய வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்காக போராட தயராக இருக்கின்றனர். இதனால் நாளைய போட்டியில் நிச்சயம் வெற்றியைப் பதிவுசெய்ய கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மைதானம் எப்படி

பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும் தரம்சாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் அதிக ஸ்கோரிங் போட்டிகளை இங்கே காணலாம். இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 4 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 15
  • வங்கதேசம் - 09
  • ஆஃப்கானிஸ்தான் - 06 

உத்தேச லெவன்

வங்கதேசம்: லிட்டன் தாஸ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கே), மெஹிதி ஹசன் மிராஜ், தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹீம் , மெஹிதி ஹசன், தஸ்கின் அகமது, நாசம் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் ஹஸ்லாம்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் 

  • விக்கெட் கீப்பர் - ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள்- ரஹ்மத் ஷா, நஸ்முல் ஹுசைன் சாண்டோ, இப்ராஹிம் சத்ரான்
  • ஆல்ரவுண்டர் - ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முகமது நபி, மஹெதி ஹசன், மெஹதி ஹசன் மிராஜ்
  • பந்துவீச்சாளர்கள்- தஸ்கின் அகமது, ரஷித் கான் (துணை கேப்டன்), முஜீப் உர் ரஹ்மான்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை