ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று புதிய சாம்பியனாக வலம் வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தன் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)
போட்டி முன்னோட்டம்
நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் நடப்பு உலகக்கோப்பை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வியடைந்தாலும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து மீண்டும் வெற்ற் பாதைக்கு திரும்பியுள்ளது. அதிலும் அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் மாலன் சதமடித்தும், நட்சத்திர வீரர் ஜோ ரூட் அபாரமான ஃபார்மில் இருப்பதும் அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அதிரடி வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சில் மார்க் வுட், ரீஸ் டாப்லீ, கிறிஸ் வோக்ஸ் ஆகியோருடன் சுழற்பந்துவீச்சளர் ஆதில் ரஷித் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. அவர்களுடன் பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி ஆகியோரும் களமிறங்கும் பட்சத்தில் நிச்சயம் இங்கிலாந்து அணி வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபக்கம் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளதால், முதல் வெற்றியை ஈட்டும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் பேட்டிங்கில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அபாரமாக செயல்பட்டு அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்துவருகிறார்.
அவருடன் ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஸத்ரான், இப்ரஹிம் ஸத்ரான், முகமது நபி போன்ற அதிரடி பேட்டர்களும் இருப்பது அணியின் பேட்டிங் வலிமையைக் கூட்டியுள்ளது. அவர்களுடன் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோருடன் ஃபசல்ஹக் ஃபரூக்கி நவீன் உல் ஹக் ஆகியோரும் இருப்பது அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
வரலாற்றில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வந்த டெல்லி மைதானம் தற்போது பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் வழக்கமாக புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் சராசரி ஸ்கோர் 241 ஆகும். மேலும் பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் இங்கு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் -02
- இங்கிலாந்து - 02
- ஆஃப்கானிஸ்தான்- 00
உத்தேச லெவன்
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் (கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், மார்க் வூட், ரீஸ் டாப்லி.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஸத்ரன், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்
- பேட்ஸ்மேன்கள்- ஜோ ரூட் (துணை கேப்டன்), ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, டேவிட் மலான் (கேப்டன்), ஹாரி புரூக், இப்ராஹிம் சத்ரான்.
- ஆல்ரவுண்டர் - அஸ்மத்துல்லா ஒமர்சாய்
- பந்துவீச்சாளர்கள்- கிறிஸ் வோக்ஸ், ரஷித் கான், ரீஸ் டாப்லி.
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.