ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Nov 10 2023 22:28 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இங்கிலாந்து, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டன. அரை இறுதிக்கு தகுதி பெறும் 4ஆவது மற்றும் கடைசி அணி எது என்பதில் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அரை இறுதி வாய்ப்பில் நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை இருந்தன. நியூசிலாந்து நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.743 ஆக உள்ளது. பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் (ரன் ரேட் +0.036) உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் மோதுகிறது. இதில் பாகிஸ்தான் வெற்றி பெறுவதுடன், நியூசிலாந்தின் ரன் ரேட்டையும் முந்த வேண்டும்.

ஆனால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே நியூசிலாந்தின் ரன் ரேட்டை கடக்க முடியும். ஒரு வேளை இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்தால் அந்த இலக்கை பாகிஸ்தான் 3.4 ஓவர்களிலேயே எடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இமாலய ரன்களை குவித்து பின்னர் இங்கிலாந்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும். இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பு முடிந்து விடும். பாகிஸ்தானுக்கு சாதகமான சூழல் இல்லாததால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

பிட்ச் ரிப்போர்ட்

ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பொறுத்த வரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். இருப்பினும் முதலில் பேட்டிங் செய்யும் அணி சற்று சவாலை சந்திக்க கூடும். அத்துடன் இப்போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் பனியின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 91
  • இங்கிலாந்து - 56
  • பாகிஸ்தான் - 32
  • முடிவில்லை - 03

உத்தேச லெவன்

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கே), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், ஆதில் ரஷித்.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷஃபிக், ஃபகார் ஸமான், பாபர் ஆசம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, ஆகா சல்மான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம், ஹாரிஸ் ரவூஃப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள் - பென் ஸ்டோக்ஸ், பாபர் ஆசாம், டேவிட் மலான் (துணை கேப்டன்), ஃபகர் ஸமான்
  • ஆல்ரவுண்டர் - கிறிஸ் வோக்ஸ் (கேப்டன்), இஃப்திகார் அகமது
  • பந்துவீச்சாளர்கள்- ஆதில் ரஷித், டேவிட் வில்லி, ஷஹீன் அஃப்ரிடி, முகமது வாசிம்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை