ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் இன்று புனேவில் நடைபெற்றுவரும் 17ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அதை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்துக்கு லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினார்கள். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 51 ரன்கள் எடுத்திருந்த தன்ஸித் ஹசன் 51 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 7 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தாஹித் ஹிரிடோயும் 16 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முஷ்பிக்கூர் ரஹீம் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை 200 ரன்களைக் கடக்கச் செய்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிக்கூர் ரஹீம் 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை போரடிய மஹ்முதுல்லா 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 4 ரன்களில் தவறவிட்டார். இதனால் 20 ஒவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.