ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Oct 10 2023 16:46 IST
Image Source: CricketNmore

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவருகிறது. இதில் 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. 

இந்நிலையில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

 போட்டி முன்னோட்டம்
 
இந்தியாவின் பேட்டிங் துறையில் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகமாக பார்க்கப்பட்டாலும் ரோஹித் சர்மா, இசான் கிசான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங் துறையை வலுப்படுத்துகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியில் தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் இந்தியாவை நங்கூரமாக நின்று வெற்றி பெற வைத்தனர்.

அத்துடன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக ஆப்கானிஸ்தானுக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று நம்பலாம். அதே போல குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் நல்ல ஃபார்மில் தயாராக இருக்கின்றனர். அது போக பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது எதிரணிக்கும் மிகப்பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பது பலமாகும். இருப்பினும் நவீன்-உல்-ஹக், ஃபரூக்கி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உச்சகட்ட சவாலை கொடுப்பவர்களாக இல்லை.அதே போல ஆல் ரவுண்டர்கள் துறையில் அனுபவ வீரர் முகமது நபியை தவிர்த்து வேறு வீரர்கள் தரமாக இல்லை. 

இருப்பினும் பேட்டிங் ரஹ்மனுல்லா குர்பஸ், இப்ராகிம் ஸத்ரான், நஜிபுல்லா ஸத்ரான் ஆகியோர் இந்திய பவுலவர்களுக்கு ஓரளவு சவாலை கொடுப்பார்கள் என்று நம்பலாம். எனவே சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் இருக்கும் இந்தியா ஏற்கனவே ஆஸ்திரேலியாவை தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் இப்போட்டியிலும் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்

வரலாற்றில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வந்த டெல்லி மைதானம் தற்போது பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் இந்தப் போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம் வழக்கமாக புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலும் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களும் தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் இங்கு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • இந்தியா - 02
  • ஆஃப்கானிஸ்தான் - 00
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன் 

இந்தியா: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்ஸ்மேன்கள்- ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), இப்ராஹிம் ஸத்ரான்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- முஜீப் உர் ரஹ்மான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ரஷித் கான்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை