ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Oct 17 2023 15:46 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இதில் நாளை நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஹஸ்மதுல்லா ஷாஹிடி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியும் சென்னையிலுள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனெவே ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சிகொடுத்துள்ள நிலையில், நியூசிலாந்துக்கும் அதிர்ச்சியளிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஃப்கானிஸ்தான்
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம் 

நியூசிலாந்து அணி நடப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் தங்களது வெற்றியை தொடரும் வகையில் நாளைய போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது அந்த் அணிக்கு மீண்டும் பின்னடை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலீப்ஸ், டேரில் மிட்செல், வில் யங், மார்க் சாப்மேன் ஆகியோர் பேட்டிங்கிலும், மிட்செல் சாண்டனர், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன் ஆகியோரும் இருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கேன் வில்லியனுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள டாம் பிளெண்டலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் ஆஃப்கானிஸ்தான் அணி கடந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இது அந்த அணியின் இரண்டாவது உலகக்கோப்பை வெற்றியாக அமைந்துள்ளது. அதே உத்வேகத்துடன் நாளைய போட்டியிலும் களமிறங்கவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஹ்மனுல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, இப்ராஹிம் ஸத்ரான், இக்ரம் அலிகில், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, முகமது நபி, ரஷித் ஆகியோரும் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கீ ஆகியோருடன் ஆல் ரவுண்டர்களான முகமது நபி, ரஷித் கான் ஆகியோரும் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆரம்பக்கட்ட ஓவர்களில் சூழ்நிலைகளை புரிந்து நிதானமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். ஆனால் மேலும் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறி சேசிங் செய்வதற்கு சமமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • நியூசிலாந்து - 02
  • ஆப்கானிஸ்தான் - 00

உத்தேச லெவன் 

நியூசிலாந்து: டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம் (கே), மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கே), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே, ரஹ்மானுல்லா குர்பாஸ்
  • பேட்ஸ்மேன்கள்- டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ்
  • ஆல்ரவுண்டர்கள் - முகமது நபி, மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்- மேட் ஹென்றி, ரஷித் கான் (துணை கேப்டன்), லோக்கி ஃபெர்குசன், முஜீப் உர் ரஹ்மான்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை