ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Oct 05 2023 21:25 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்து vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 
  
போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs நெதர்லாந்து
  • இடம் - ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத் 
  • நேரம் - மதியம் 2 மணி (GMT 0830)

போட்டி முன்னோட்டம்

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் முதன்மையான பலமாக பார்க்கப்படுவது அவர்களின் வேகப்பந்து வீச்சு தான். ஷாஹின் ஷா அஃப்ரிடி, ஹாரிஷ் ராஃப், ஹசன் அலி மற்றும் உஷாமா  ஷாஹீன் ஆகிய, உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தொடர்ந்து திணறடித்து வருகின்றனர். 

அவர்களுடன் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி அணியில் இடம்பெற்று இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது. பேட்டிங்கிலும் பாபர் அசாம், ஃபகார் ஜமான், முகமது ரிஸ்வான், இஃப்திகார் அஹ்மத், அகா சல்மான் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். இதனால் நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேசமயம் மறுபக்கம் உள்ள நெதர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிடமுடியாது. ஏனெனில் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே போன்ற அணியை வீழ்த்தி நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு முன்னேறி சாதித்துள்ளது.

நெதர்லாந்து அணியை எடுத்துக்கொண்டால் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட், வேன் டெர் மெர்வி ஆகியோர் பேட்டிங் துறையில் தரமான வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். அதே போல பவுலிங் துறையில் வேன் பீக், ஆர்யன் தத், ரியன் க்ளென் ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர். 

ஆல் ரவுண்டர்களில் பாஸ் டீ லீட், லோகன் வான் பீக், காலின் அக்கர்மேன் ஆகியோர் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர்களாக பார்க்கப்படுகின்றனர். அவர்களை தவிர்த்து அந்த அணியின் பெரும்பாலான வீரர்கள் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை திருப்பும் அளவுக்கு இல்லை என்பதே நிதர்சனமாகும். இருப்பினும் நாளைய போட்டியில் முடிந்த அளவுக்கு பாகிஸ்தான் அணிக்கு சவாலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானம் எப்படி

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சதாகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியிலும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 06
  • பாகிஸ்தான் - 06
  • நெதர்லாந்து - 00

    
உத்தேச லெவன்

பாகிஸ்தான்: இமான் உல்-ஹக், ஃபக்கர் ஸமான், பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், இஃப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.

நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ'டவுட், காலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கே), பாஸ் டி லீட், வான் டெர் மெர்வே, ஷாரிஸ் அகமது, லோகன் வான் பீக், ரியான் கிளைன், பால் வான் மீகெரென். 

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
  • பேட்ஸ்மேன்கள்- பாபர் அசாம் (கே), இமாம் உல் ஹக், சவுத் ஷகீல், மேக்ஸ் ஓ'டவுட்
  • ஆல்-ரவுண்டர்கள் - காலின் அக்கர்மேன், ஷதாப் கான் (துணை கேப்டன்), பாஸ் டி லீட்
  • பந்துவீச்சாளர்கள்- லோகன் வான் பீக், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை