ஐசிசி தொடரும் முகமது ஷமியும் ஒரு சிறந்த காதல் கதை - பியூஷ் சாவ்லா பாராட்டு!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியில் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக அபார வெற்றியைப் பெறுவதில் அனுபவ வேகப்பந்து வீச்சாளார் முக்கிய பங்கினை வகித்தார். அவர் தனது அபாரமான பாந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் தனது 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் எனும் சாதனைகளையும் படைத்தார். மேற்கொண்டு ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் ஜாகீர் கானின் சாதனையையும் முகமது ஷமி தகர்த்துள்ளார்.
இந்நிலையில் ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரையில் முகமது ஷமி ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறுகிறார் என முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி தொடர்களும் முகமது ஷமியும் - இது ஒரு சிறந்த காதல் கதை. அவர் ஐசிசி போட்டிகளில் விளையாடும் போதெல்லாம், அவர் முற்றிலும் மாறுபட்ட பந்து வீச்சாளராக மாறுகிறார். மேலும் அவர் தற்போது தான் காயத்திலிருந்து மீண்டுள்ளார். சமீபத்திய தொடரிலும் அவர் சிறப்பாக தெரியவில்லை.
ஆனால் இப்போட்டியில் அவர் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளராக தெரிந்தார். மேலும் அவர் முழுமையாக தனது ஓவர்களை வீசியது நேர்மறையான அறிகுறியாகும். இருப்பினும் நாங்கள் இன்னும் 100% ஷமியைப் பார்க்கவில்லை, ஆனால் இந்த ஐந்து விக்கெட்டுகள் நிச்சயமாக அவரது நம்பிக்கையை அதிகரிக்கும். நிலைமைகளை மதிப்பிடுவது மிகவும் முக்கியம், மேலும் ஷமி, தனது நேரான சீம் நிலையில், பந்தை எங்கு வீச வேண்டும் என்பதை சரியாக அறிவார்.
Also Read: Funding To Save Test Cricket
அவர் தொடர்ந்து ஆறு முதல் எட்டு மீட்டர் தூரத்திலேயே பந்துவீசினார். இது அவருக்கு மேற்பரப்பில் இருந்து இயக்கத்தை பெற அனுமதித்தது. அதனால்தான் அவர் வெற்றி பெற்றார், புதிய பந்தில் ஆரம்ப விக்கெட்டுகளை எடுத்தார். அதேசமயம் அவரால் பழைய பாந்திலும் ஸ்லோவர் பந்துகள் உள்பட மாறுபாடுகளைப் பயன்படுத்துவதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.