தோனி கேப்டன்சியில் ஆர்சிபி கோப்பைகளை வென்றிருக்கும் - வாசிம் அக்ரம்!

Updated: Sun, May 07 2023 18:13 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் ஆர் சி பிரியாணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது . அந்த அணி மீது இருக்கக்கூடிய எல்லா போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது .

ஐபிஎல் தொடரில் சிறந்த அணியை பெற்றிருந்தும் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை . அந்த அணிக்காக விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், கிளன் மேக்ஸ்வெல், முத்தையா முரளிதரன், அனில் கும்ப்ளே, கெவின் பீட்டர்சன், ஜாக் காலிஸ் போன்ற திறமையான வீரர்கள் விளையாடி இருந்தாலும் அந்த அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை .

2009, 2011 மற்றும் 2016 ஆகிய மூன்று வருடங்களும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது . ஆனால் மூன்று முறையும் தோல்வியே சந்தித்துள்ளது பெங்களூர் அணி . பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு தோனி போன்ற ஒரு கேப்டன் இல்லாததே மிகப்பெரிய காரணம் என தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் .

இதுகுறித்து பேசிய அவர், “மகேந்திர சிங் தோனி மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் ஆர் சி பி அணி இதுவரை மூன்று முறையாவது கோப்பைகளை கைப்பற்றி இருக்கும் . ஆனால் அவர்களால் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை . உலகின் மிகச் சிறந்த வீரரான விராட் கோலி அந்த அணியில் தான் விளையாடி வருகிறார் . மேலும் அந்த அணிக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள் . ஆனாலும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அது துரதிஷ்டவசமானது.

கேப்டன் பதவி என்பது ஒரு பழக்கம் . ஒரு அணிக்கு தலைமை ஏற்று நடத்தும் பழக்கம் தோனிக்கு இருக்கிறது . அந்தப் பழக்கம் இப்போது கோலிக்கும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் . தோனி உள்ளிருந்து அமைதியாக இல்லை ஆனாலும் அவர் தன்னை வெளியே அமைதியாக காட்டிக் கொள்வார் . எந்த ஒரு வீரர்களும் இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் கேப்டன் அமைதியாக இருப்பதே விரும்புவார்கள் . இக்கட்டான சூழ்நிலைகளிலும் கேப்டன் தங்கள் தோளில் கை போட்டு பேசும் போது வீரர்கள் அதிக நம்பிக்கையை உணர்வார்கள் . அந்த நம்பிக்கையை தனது வீரர்களுக்கு ஏற்படுத்த தெரிந்தவர் எம் எஸ் தோனி” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை